தமிழ் நாட்காட்டி - ௨௦௪௪ (2044)
சிலவற்றைச் செய்யவேண்டும் என்ற எண்ணம், நமக்குள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதைச் செய்து முடித்துவிட்டு வெளியிடும் முச்சு, அதற்கு ஈடேது?
வெகுநாட்களாக, தமிழ் நாட்காட்டி வரையவேண்டும் என்று எண்ணியிருந்தேன். இதோ அது உங்கள் பார்வைக்கும், பயன்பாட்டிற்கும். இதை செய்து முடிப்பதற்கு, துணை நின்ற என் இளையவன், புகழ்ச்செல்வனுக்கும், என்தோழர்கள் வெற்றியரசனுக்கும் இமயவர்மனுக்கும் என் நன்றிகள்…

நாட்காட்டி
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையய் முதலாய்க் கொண்டு தொடங்குகிறது. ஞாயிறு முதலாய் திங்கள், செவ்வாய், அறிவன்(புதன்), வியாழன், வெள்ளி, காரி(சனி)-யோடு முடிவடைகிறது. இது நானும், என்னைச் சேர்ந்தாரும் தேற்றியவற்றைக் கொண்டு வடிவமைக்கபட்டது. பிழையிருந்தால், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம்.
திருத்தம்: ஐயா க.தமிழமல்லன், அவர்கள் எடுத்துரைத்தபடி, “ஆடவை” என்பது “இரட்டை” என்று மாற்றம் செய்யப்பட்டது. க.தமிழமல்லன் அவர்களின், உதவிக்கும், பாராட்டுகளுக்கும் என் நன்றிகள் பல…
~ வணங்காமுடி